இன்றைய வேத வசனம்! 12.12.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை (யோவான் 7:46)
உலகெங்கும் உள்ள சகல வார்த்தைகளை எடுத்துக் கொண்டாலும், நமது ஆண்டவர் பேசிய வார்த்தைகளுக்கு வல்லமை இருந்ததைப் போல, வேறு யாருடைய வார்த்தைக்கும் வல்லமை இருந்ததில்லை.
கிறிஸ்துவைப் பிடித்துவரும்படி சென்ற போர்ச்சேவகர்கள், அவர் வார்த்தையில் மயங்கி, அவரைப் புகழ ஆரம்பித்து விட்டார்கள்.
ஆம், வார்த்தைகளுக்கு வல்லமையுண்டு. கிறிஸ்துவின் ஒரு வார்த்தையில் கொந்தளித்தக் கடலும், சீறிய புயலும் அமர்ந்தன.
ஒரு வார்த்தையில் தண்ணீர் திராட்சைரசமானது. "லாசருவே வெளியே வா" என்ற வார்த்தை மரித்தவர்கள் மத்தியில் லாசருவை வேறு பிரித்து உயிர்த்தெழச் செய்தது.
கிறிஸ்துவின் வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலானவை! எவ்வளவு போதனை நிறைந்தவை! அவை ஆவியும் ஜீவனுமானவை.
மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். (மத்தேயு 4:4)
வார்த்தைகளின் வல்லமையை, நமது ஆண்டவர் தன் அனுபவத்தின் மூலம் நமக்குக் கற்றுக்கொடுத்தார்.
உங்களது வார்த்தைகள் எப்படி இருக்கின்றது? ஆக்கலா? அல்லது அழித்தலா? கட்டுதலா? அல்லது இடித்தலா? என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
நீதிமொழிகள் 4:5
ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.