நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

Prabha Praneetha
4 years ago
நாட்டில் புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு அதிகரிக்கும் என எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் மரக்கறி தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மரக்கறி வியாபாரிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் மரக்கறி வகைகளுக்கான தட்டுப்பாடு நீடிக்குமானால் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மரக்கறிகளின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக தமக்கு வியாபாரத்தை எடுத்துச் செல்ல முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4