பால் மா விநியோகத்தை நிறுத்திய நிறுவனங்கள் 

#Milk Powder
Prathees
4 years ago
பால் மா விநியோகத்தை நிறுத்திய நிறுவனங்கள் 

முக்கிய பெருந்தோட்ட நகரங்களுக்கு பால் மா பொதிகளை பால் மா நிறுவனங்கள் விநியோகிக்காததால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பால் நிறுவனங்கள் பால் மாவின் விலையை அதிகரித்துள்ள போதிலும், சந்தைக்கு பால் மா கையிருப்பு வழங்கப்படாமையால் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தங்கள் கடைகளுக்கு பால் மா பாக்கெட்டுகளை வழங்காததால் கடைகளில் பால் மார் பாக்கெட்டுகள் வைப்பதற்காக ஒதுக்கப்பட்ட அலமாரிகள் வெறிச்சோடி இருப்பதாக பால் மா நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள அம்பேவெல ஹைலேண்ட் பால் சந்தையும் பால் மா கிடைக்காத காரணத்தினால் மூடப்பட்டிருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4