பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!

#SriLanka #Police #Accident #Kilinochchi #Road #ImportantNews
Lakhi
1 hour ago
பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!

கடந்த 22. 06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இவரின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு விபத்துக்கள் மது மற்றும் போதைப்பொருள் பாவனையினால் இடம் பெறுவதாகவும், இதற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பு அதிகாரி உரிய பதிலை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தும், குறித்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி உடன் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்து இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைக்கு ஐந்து நாட்களுக்குள் உரிய பதிலை பெற்றுத்தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு நேரடியாக தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

 குறித்த விடயம் தொடர்பாக மேலும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் s முரளிதரன் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட பொலிசார் மற்றும் சம்பந்தப்பட்ட சிவில் அமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து உரிய தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிளிநொச்சியில் பிரதான முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4