யாழ் சென்ற புகையிரதத்துடன் மோதிய முச்சக்கரவண்டி:  மயிரிழமையில் உயிர் தப்பிய சாரதி 

#Accident
Prathees
4 years ago
யாழ் சென்ற புகையிரதத்துடன் மோதிய முச்சக்கரவண்டி:  மயிரிழமையில் உயிர் தப்பிய சாரதி 

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் இன்று காலை  முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி முச்சக்கர வண்டியில் இருந்து பாய்ந்தமையால் மயிரிழமையில் உயிர் தப்பியுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற கடுகதி புகையிரதமானது தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் காரணமாக சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முச்சக்கர வண்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்இ அது முழுமையாக சேதமடைந்துள்ளது. 

இவ் விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4