ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விளக்கம்

Nila
4 years ago
ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விளக்கம்

தற்போது உலகை கதிகலங்கை வைத்திருக்கும் கொரோனாவின்  மற்றொரு பிரிவான ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது. 

ஒமைக்ரான் தற்போது பல நாடுகளில் பரவி வரும் இந்நிலையில், தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது பல்வேறு தரப்பினரின் கேள்வியாக உள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால் கூறும்போது,

கொரோனா தற்போது பல பிறழ்வுகளாக உருவெடுத்து வருகிறது. உலக நாடுகள் கொரோனாவிலிருந்து தடுப்பூசியின் மூலம் விடுபட்டு வருகிறது. தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், ஒமைக்ரான் அதிகம் பரவுவதற்கான வாய்ப்பை தடுக்கும். அதே நேரத்தில் புதிய தொற்றுக்கள் பரவுவதை முழுமையாக தடுக்காது என்பதை அறிவது முக்கியம். 

நோய்த்தொற்றினால் கடுமையான பாதிப்பினை எதிகொள்ளும் நபர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நபர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் டோஸ் தேவைப்படுகிறது. மேலும் வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. என்று கேட்ரபால் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4