உலகத்தினை நேசிப்பதுதான் பௌத்த மதம் - அத்துலிய ரத்தனதேரர்

Reha
2 years ago
உலகத்தினை நேசிப்பதுதான் பௌத்த மதம் - அத்துலிய ரத்தனதேரர்

கடந்த 30 வருடகாலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்கள மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்தகலாச்சார பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியினை முதற்கட்டமாக 32 மாணவர்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் சிங்களம், தமிழ் மொழிலிலான பிரச்சனையில் விவசாயிகளுக்கான காணியில்லை, விவசாயிகள் தொழில்நுட்பத்திற்கான தொழில் முறையில்லை அதற்கான நிதியில்லை அதனை முன்னெடுத்து செல்கின்றவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புயில்லை. இவை தீர்க்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். அதிலும் சாதிப் பிரவினை ஏற்றுக்கொள்ள முடியாது நன்கு வளர்ச்சி அடைந்த பிரிவினையில் சாதிப் பிரவினையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

விவேகானந்தர் மற்றும் ஏனைய சமய பெரியார்களின் உருப்பட்ட உபதேசங்களில் கூறப்பட்ட ஒன்று இந்த பிரச்சனை இருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் எல்லோரும் சாதிப்பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும். பௌத்த மதத்திலும் சாதிப்பிரிவினையினை புத்தபெருமான் எதிர்க்கின்றார். உலகத்தினை நேசிப்பதுதான் பௌத்த மதம் உலகத்தில் உள்ளதைபோன்று அனைத்து உயிர்களையும் நேசிக்கவேண்டும். அதுதான் காலத்தின் அவசியம். இப்போது எமது மாகாணத்தில் தேவையாக இருப்பது கணனி பொறியியலாளராக வருவது மிக அவசியம் அதற்கான தொழில்வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். அதற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!