அதிபரை மண்டியிட வைத்த  வழக்கு விசாரணை எப்படி முடிந்தது?

#Court Order
Prathees
4 years ago
அதிபரை மண்டியிட வைத்த  வழக்கு விசாரணை எப்படி முடிந்தது?

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபரை மண்டியிட வைத்ததாக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு  தீர்வு எட்டப்பட்டுள்ளது.

நேற்று இணக்க சபையில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் பதுளை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பதுளை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது

 சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் மத்தியஸ்த சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி நேற்று இரு தரப்பினரும் மத்தியஸ்த சபைக்கு அழைக்கப்பட்டனர். பவானி ரகுநாதன் இந்த வழக்கை தீர்த்து வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் சம்மதத்துடன் வழக்கை சமரசம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4