அமைச்சரவை தீர்மானம் எடுக்க வேண்டும் - விமல்

#Wimal Weerawansa
Prathees
4 years ago
அமைச்சரவை தீர்மானம் எடுக்க வேண்டும் - விமல்

சர்ச்சைக்குரிய யுதகனவி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் பாதகமான அம்சங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

குறித்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காவிட்டால் அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால், நல்ல திருத்தங்களைச் செய்ய வாய்ப்பு இருக்காது என்று நினைக்கிறேன்.

அந்த ஒப்பந்தத்தில் இந்த நாடு முன்னேற முடியுமா, முடியாதா என அமைச்சரவை தீர்மானம் எடுக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்காவிட்டால், அது செல்லாது.

மேலும், என்ன கையொப்பமிட்டாலும், இந்த அனைத்து காரணிகளையும் நீதிமன்றம் கருத்தில் கொண்டுஇ, ஒப்பந்தம் செல்லாது என்று முடிவு செய்தால், அந்த ஒப்பந்தம் செல்லாது என அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4