என்னை கைது செய்ய முயற்சி! போதைப்பொருளுக்காக வீட்டில் சோதனை

#Colombo
Prathees
4 years ago
என்னை கைது செய்ய முயற்சி! போதைப்பொருளுக்காக வீட்டில் சோதனை

தனது வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததாக கூறி, கடந்த 10ம்  திகதி சிவில் உடையில் வந்த கும்பல் அந்த வீட்டை சோதனையிட்டதாக  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் யாசிரு குருவிட்ட தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத்தளத்தில் முறையான பாதுகாப்பு அமைப்பு இல்லை என தெரிவித்தமை தொடர்பில் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மே 16ஆம்  திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது

அதற்கு முதல் போதைப்பொருள் விற்பனை செய்வதாக கூறி அவரை கைது செய்யும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக ராஜீவ் யசிரு குருவிட்டகே மேலும் தெரிவித்துள்ளார்.

 போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் உடஹமுல்ல பிரதேசத்தில் உள்ள ராஜீவ் யசிரு குருவிட்டவின் இல்லத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்வா இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

 போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி அவசியமில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4