சுதந்திரக்கட்சிக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மைத்திரி

Prabha Praneetha
4 years ago
சுதந்திரக்கட்சிக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மைத்திரி

ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால், கூட்டணி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.

சுதந்திரக்கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றதா என ஊடகவியலளார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

சில வீடுகளில் அப்பா, அம்மா மற்றும் ஏழு, எட்டு பிள்ளைகள் இருக்கும் போது ஒவ்வொரு பிள்ளைகளையும் வித்தியாசமாக நடத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்படும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடி விடுவார்கள். பெண் பிள்ளைகள் வேறும் ஆணுடன் சென்று விடுவார்கள்.

அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4