இலங்கையில் மீண்டும் நெருக்கடியில் எரிவாயு விநியோகம்!

#SriLanka #Laugfs gas #Litro Gas
Nila
4 years ago
இலங்கையில் மீண்டும் நெருக்கடியில் எரிவாயு விநியோகம்!

இலங்கையில்  எரிவாயு விநியோகத் தில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளதுடன் பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு கிடைக்கவில்லை என்று நுகர்வோர் கூறுகின்றனர்.
 
லிட்ரோ நிறுவனம் புதிய நியமங்களின் கீழ் சந்தைக்கு எரிவாயுவை விநியோகித்தாலும், நுகர்வோர் பழைய கையிருப் பில் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை கொண்டு வருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்குமாறு சில நாட்களுக்கு முன்னர் நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
 
எனினும், சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீல் வைக்கப்படாத பிரச்சினைக் குரிய எரிவாயு சிலிண்டர்களை மாற்றுவதற்காக வாடிக்கையாளர்கள் கொண்டு வந்த போது புதிய சிலிண்டரை வழங்க வாடிக்கையாளர்களிடம் கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்திடம் ஏற்கனவே வினவப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. ஹட்டன் கொட்டலகல தோட்டத் திலுள்ள  வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட எரிவாயு சிலிண்டரே வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4