எரிவாயு அடுப்பு வெடிப்பு: மாடியில் இருந்து குதித்த யுவதிக்கு நேர்ந்த கதி

#Laugfs gas
Mayoorikka
4 years ago
எரிவாயு அடுப்பு வெடிப்பு: மாடியில் இருந்து குதித்த யுவதிக்கு நேர்ந்த கதி

எரிவாயு அடுப்பு வெடித்ததில் பீதியடைந்த யுவதி ஒருவர் வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ள சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருவிட்ட - பதுஹேன பிரதேசத்திலேயே இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த யுவதிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலையைச் சேர்ந்த குறித்த யுவதி, பதுஹேன பிரதேசத்தில் உள்ள அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4