வெளிநாட்டவர்கள் பயணிக்க அதிவேக கடல் வழி நெடுஞ்சாலை!
இலங்கைக்கடலில் கடல்வழி நெடுஞ்சாலையொன்றை அமைத்து அந்த நெடுஞ்சாலைக்கான செலவை கடன் வழங்கிய நாடுகள் பொறுப்பேற்று பயன்படுத்தி நாட்டின் கடனை அடைக்க மாற்று வழி திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது
இந்த அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்வதன் மூலம் நேரம் மீதமாகும் என்பதுடன் வான் வழியாக பயணம் செய்யும் நேரம் ஒரு மணித்தியாலத்தால் குறையும் என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மீதமாகும் பணத்திற்கு ஈடாக இலங்கை பெற்ற கடனை திரும்ப செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோருவது இந்த யோசனையின் திட்டமாகும்.
கடல் வழியிலான இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் நாடுகள், அவற்றின் வருடாந்த இலாபத்தை 8 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கவும் செலவுகளை 2 பில்லியன் டொலர்களாக குறைக்கவும் முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான எண்ணக்கருவை உள்ளடக்கிய ஆவணம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதுடன் இதனடிப்படையில் இது குறித்து உலக வங்கி உட்பட ஏனைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையில் அனுமதி பெறப்படவுள்ளது.
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கடன் தொகையானது சுமார் 60 பில்லியன் டொலர்களாகும்.
எது எப்படி இருந்த போதிலும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இடையில் கடல் வழியிலான வீதியை நிர்மாணிப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும் அந்த யோசனையானது பேச்சளவில் மாத்திரமே இருந்து வந்ததுடன் அதனை செயற்படுத்தும் விதமான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.