காலி சிறைச்சாலைக்கு சென்ற ஆலோசகரின் காலணியில் இருந்த பொருள்

#Arrest
Prathees
4 years ago
காலி சிறைச்சாலைக்கு சென்ற ஆலோசகரின் காலணியில் இருந்த பொருள்

காலி சிறைச்சாலைக்கு வந்திருந்த பாடநெறி பயிற்றுவிப்பாளர் ஒருவரின் காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புகையிலை பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சிறைக் கைதிகளுக்கான புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் செயற்படும்  பேஷன் பாடநெறியைக் கற்றுக்கொடுக்க குறித்த  ஆலோசகர் வந்துள்ளார்.

இன்று (13) காலை 9 மணியளவில் காலி சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு வந்த சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆலோசகர் அணிந்திருந்த ஜோடி காலணியில் புகையிலை பார்சல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட  பாடநெறி பயிற்றுவிப்பாளரும் புகையிலையும் காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4