மதில் விழுந்து இராணுவச் சிப்பாய் மரணம்!

#Death
Prasu
4 years ago
மதில் விழுந்து இராணுவச் சிப்பாய் மரணம்!

பதுளை, தியத்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணுவக் கல்லூரியில், பழைய மதிலொன்றை உடைப்பதற்கு முயற்சித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மதில் விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

மடுல்சீமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயது இராணுவச் சிப்பாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய் தியத்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4