யாழில் கொரோனாவால் 3 பிள்ளைகளின் தாய் மரணம்!

#SriLanka #Corona Virus #Death
Prasu
4 years ago
யாழில் கொரோனாவால் 3 பிள்ளைகளின் தாய் மரணம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது - 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர் நேற்று மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார்.

எனினும், குடும்பப்பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவருக்குக் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தி இன்று மாலை பரிசோதனை அறிக்கையிடப்பட்டுள்ளது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த குடும்பப் பெண் கொரோனாத் தடுப்பூசியின் முழுமையான அளவைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளின் அடிப்படையில் சடலம் தகனம் செய்யப்படவுள்ளது.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4