ஜனாதிபதி செயலர் பதவியிலும் மாற்றம்? - ஜயசுந்தரவை உடனடியாக நீக்குமாறு கோட்டாவுக்கு அமைச்சர்கள் அழுத்தம்

#Gotabaya Rajapaksa
Prasu
4 years ago
ஜனாதிபதி செயலர்  பதவியிலும் மாற்றம்? - ஜயசுந்தரவை உடனடியாக நீக்குமாறு  கோட்டாவுக்கு அமைச்சர்கள் அழுத்தம்

ஜனாதிபதி செயலாளர் பதவியிலிருந்து பிபீ ஜயசுந்தரவை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுப்பதற்கு அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன உட்பட மேலும் சில அமைச்சர்களும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளனர்.

இதன் பிரகாரம் ஜனாதிபதி செயலாளர் பதவியில் விரைவில் மாற்றம் வரவுள்ளது எனவும், புதிய ஜனாதிபதி செயலாளராக முன்னாள் அமைச்சரவை செயலாளரான அமரசேகர நியமிக்கப்படவுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

அமரசேகர தற்போது தென்னாபிரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்டு வருகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4