இன்று முதல் கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர்

#Covid Vaccine
Prasu
4 years ago
இன்று முதல் கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர்

கொழும்பில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்று முதல் Pfizer Booster டோஸ் மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் நிபுணர் டொக்டர் தினுக குருகே தெரிவித்தார்.

டுவிட்டர் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வேலை செய்பவர்களோ அல்லது வசிப்பவர்களோ அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

மூன்று மாதங்களின் பின்னர் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்க முடியும் என கொழும்பு மாநகர சபையின் தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்தார்.

டோஸ் 2க்குப் பிறகு நீங்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தொற்று ஏற்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்று ட்வீட் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4