12 நாட்களில் 586 எரிவாயு வெடிப்புகள்

#Litro Gas
Prathees
2 years ago
12 நாட்களில் 586 எரிவாயு வெடிப்புகள்

இம்மாதம் (டிசம்பர்) கடந்த 12 நாட்களில் காஸ் சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பான 586 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 12 வரை 694 எரிவாயு சிலிண்டர் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் நவம்பர் முதல் டிசம்பர் 12 வரை 683 வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நவம்பர் மாதத்தில் மட்டும் இதுபோன்ற 117 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான 23 வெடிப்புகள் நேற்று முன்தினம்  (12ஆம் திகதி) மாத்திரம் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும், எரிவாயு சிலிண்டர் வெடிக்கவில்லை. எரிவாயு அடுப்புகள், குழாய்கள் மற்றும் ரெகுலேட்டர்கள் வெத்துள்ள  சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிவாயு சிலிண்டர்கள் சம்பந்தப்பட்ட வெடிப்புகள் சம்பவங்களில்  கண்ணாடி பொறிக்கப்பட்ட எரிhயு அடுப்புக்கள் வெடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!