மின் விநியோகத் தடை குறித்த முக்கிய அறிவிப்பு

Prabha Praneetha
4 years ago
மின் விநியோகத் தடை குறித்த முக்கிய அறிவிப்பு

நாட்டின் எந்த பகுதிகளிலும் இன்று முதல் மின்சார விநியோகத் தடை ஏற்பபடமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் மின்பிறப்பாக்கி செயலிழந்தமையால், கடந்த சில நாட்களாக  நாட்டின் சில பிரதேசங்களில் மாலை 6 மணி முதல் 9.30 வரையான காலப்பகுதியில் அரை மணிநேரம் மின்சார விநியோக தடை ஏற்படுத்தப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குறித்த செயலிழந்த மின்பிறப்பாக்கியை வழமைக்கு கொண்டு வரும் தொழிற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இன்று முதல், மின்சாரத் துண்டிப்பு இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4