நான்காவது டோஸும் போடப்படலாம்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

#Covid Vaccine
Mayoorikka
4 years ago
நான்காவது டோஸும் போடப்படலாம்: மருத்துவர் ஹேமந்த ஹேரத்

கொழும்பு, டிசெ. 14 எதிர்காலத்தில் தேவைப்படும் பட்சத்தில் நான்காவது டோஸூம் வழங்க நேரலாம். இதனால், கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள்
பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.  'தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல. ஒரு தரவுத்தளத்தில் தகவல் சேர்க்கப்படும் வரை மற்றும் கியூ. ஆர். குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தடுப்பூசி அட்டையை பாதுகாப்பாகப்பயன்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அலைபேசி ஊடாக இந்த முறைமையைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி, தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதை தவிர்க்கவேண்டும்' என்றும் அவர் கோரினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4