இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த முடிவு! அலரி மாளிகையில் தீர்மானம்

#Basil Rajapaksa
Mayoorikka
4 years ago
இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த முடிவு! அலரி மாளிகையில் தீர்மானம்

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று  இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்கான உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் டொலர் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்நாடுகளிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

தனது அண்மைய விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்ததாகத் தெரிவித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்துடனும் (IMF) தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாட்டில் நீண்டகாலமாக நிலவும் டொலர் தட்டுப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4