பால்மா இறக்குமதி பாதிப்பு; இறக்குமதியாளர் சங்கத்தின் கோரிக்கை

#Milk Powder
Mayoorikka
4 years ago
பால்மா இறக்குமதி பாதிப்பு; இறக்குமதியாளர் சங்கத்தின் கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளில் மீண்டும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மா இறக்குமதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டொலர் தட்டுப்பாடுக்கு நிவாரணம் கோரியும்  நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு வழங்கப்படும் வரையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீதமான பால்மாக்களையே இறக்குமதி செய்ய முடிகின்றது.

அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளில் மீண்டும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4