யாழில் வைத்தியசாலை உட்பட இரு இடங்களில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

#Litro Gas
Mayoorikka
4 years ago
யாழில் வைத்தியசாலை உட்பட இரு இடங்களில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்தில் எரிவாயு அடுப்பு  வெடித்து சிதறிய  சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலேயே இன்று அச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை துன்னாலை பகுதியிலும் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

இதன் போது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெண்மணி சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4