கெரவலப்பிட்டிய 'யுகதனவி' ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகம்! - சந்திம வீரக்கொடி எம்.பி. குற்றச்சாட்டு

Reha
4 years ago
கெரவலப்பிட்டிய 'யுகதனவி' ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் துரோகம்! - சந்திம வீரக்கொடி எம்.பி. குற்றச்சாட்டு

"கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றும் ஒப்பந்தம் தேசத்தைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தமாகும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"உடன்படிக்கையைக் கைச்சாத்திட அனுமதித்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இலங்கையின் எதிர்காலத்துக்குத் துரோகம் இழைத்த குற்றவாளிகளாவர்.

இந்த உடன்படிக்கை இரகசியமாக கைச்சாத்திடப்பட்டமைக்குத் தெளிவான ஆதாரம் கிடைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்னும் செல்லுபடியாகும் என்பதால், சட்டமா அதிபரிடம் இருந்து மறைத்து கையெழுத்திட்ட ஒப்பந்தம் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது.

நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஜனாதிபதியால் வெளிக் கொணரப்படவேண்டும். பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - என்றார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4