முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கழிவறைக் குழிக்குள் சடலமாக மீட்பு

#Death #Police
Prathees
4 years ago
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கழிவறைக் குழிக்குள் சடலமாக மீட்பு

ஆராச்சிக்கட்டுவ அடிப்பல, வெலிபெலஸ்ஸ பிரதேசத்தில் நீர் தேங்கிய குழிக்குள் விழுந்து பாலர் பாடசாலை செல்லும் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. 

கடந்த 12ஆம் திகதி மாலை இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆகாஷ் சஞ்சய  என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயரிழந்த சிறுவனின் வீடு இருந்த காணியில் வீட்டை ஒட்டி கழிவறை குழி தோண்டி கல்லால் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், குழியை மூட  கொங்கிரீட் மூடி அமைக்கப்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இதனை நிறைவு செய்ய முடியவில்லை என உயிரிழந்தவரின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இதனால் கழிவறை குழி முழுவதும் தண்ணீர் நிரம்பியதாக கூறப்படுகிறது.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதையடுத்து அயலவர்களுடன் தேடிய போது, கழிவறை குழிக்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தாய் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழியில் விழுந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தபோது  ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிலாபம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4