மொட்டு எம்.பிக்களுடன் பஸில் முக்கிய சந்திப்பு!

#Meeting #Basil Rajapaksa
Prathees
4 years ago
மொட்டு எம்.பிக்களுடன் பஸில் முக்கிய சந்திப்பு!

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கிய கூட்டம் இன்று முற்பகல் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வழிமுறைகள், சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா என்பன உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.
 
அதேவேளை, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்றிரவு அமெரிக்கா நோக்கிப் புறப்படுகின்றார். இந்நிலையில், ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4