அமைச்சர் டக்ளஸை சந்தித்த அமெரிக்க இராஜ தந்திரிகள்.

#SriLanka #United_States
அமைச்சர் டக்ளஸை சந்தித்த அமெரிக்க இராஜ தந்திரிகள்.

அமெரிக்கா தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்து ஒருமித்த கருத்து அரசியல் கட்சிகளிடையே இருத்தல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் திங்கட்கிழமை (13) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்த அமெரிக்க  பதில் தூதுவர்,  தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்ற கருத்தினை முன்வைத்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  தமிழ் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத நியாயமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான சமிக்கைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவதாகவும், ஆனால் ஏனைய சில தரப்புக்கள் சுயலாபங்களுக்காக மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய தோற்றுப்போன வழிமுறைகளையே தொடர்ந்தும் பேசுவதாக தெரிவித்தார்.
அத்துடன் கடந்த காலங்களில் தன்னால் வெளிப்படுத்தப்பட்ட எதிர்வுகூறல்கள் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், காணாமல் போனோர் விவகாரத்திற்குப் பரிகாரம் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அணுகுமுறைகள் தொடர்பாகவும் புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ  ஆர்வம் வெளியிட்டுள்ள நிலையில், அதுதொடர்பில் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும்  அமெரிக்கத் தரப்பிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று, கடற்றொழில் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற சவால்கள் தொர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அமெரிக்காவின்  உதவித் திட்டங்கள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமெரிக்காவின் இலங்கைக்கான பதில் தூதுவருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4