வெளிநாடு செல்ல தயாராகும் 60 அமைச்சர்கள்!

#PrimeMinister
Mayoorikka
4 years ago
வெளிநாடு செல்ல தயாராகும் 60 அமைச்சர்கள்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர்  வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 60 உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநாடு செல்ல தயாராகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து,அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் மற்றும் படிக்கும் தமது பிள்ளைகளைப் பார்க்க, விடுமுறை நாட்களில் அந்த நாடுகளுக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றுமொரு குழு, தமது விடுமுறையை நுவரெலியாவில் கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெனரல் ஹவுஸ் என்ற  விடுதியில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4