இளைஞனின் உயிரைப் பறித்த தொலைபேசி அழைப்பு : பொடிமெனிக்கே ரயில் மோதி சம்பவம்

#Accident
Prathees
4 years ago
இளைஞனின் உயிரைப் பறித்த தொலைபேசி அழைப்பு : பொடிமெனிக்கே ரயில் மோதி சம்பவம்

பொடிமெனிக்கே ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலில் தலவாக்கலை, சென்.கிளயார் மற்றும் சென். அன்ட்ரூஸ் ஆகிய இடங்களுக்கு இடையில் இன்று (15) பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை சென்.அன்ட்ரூஸ் தோட்டத்தைச் சேர்ந்த ஆர். மோகனசுந்தரம் (வயது – 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு, ரயில் பாதையில் பயணித்த போது விபத்துக்குள்ளானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த உயிரிழந்த இளைஞரின் சடலம் கொட்டகலை ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தலவாக்கலை மற்றும் திம்புளை – பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4