அரச ஊழியர் ஓய்வு  தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது

Prathees
2 years ago
அரச ஊழியர் ஓய்வு  தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது

பொது நிறுவன ஊழியர்களின் ஓய்வு வயதை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையை கருவூல செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவினால் வெளியிடப்பட்டுள்ளது. 
இது அடுத்த ஆண்டு ஜனவரி 1ம்  திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது.

அதன்படி, அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் விருப்ப ஓய்வு வயது 57 ஆக உள்ளது.

ஒரு அதிகாரி 57 வயதுக்கு மேல் பணிபுரிய நினைத்தால், அவர்ஃஅவள் 62 வயது வரை பணி நீட்டிப்பு கோராமல் கட்டாய ஓய்வு பெறும் வரை பணியில் இருக்க முடியும்.

57 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட ஒருவர், நியமன அதிகாரிக்கு 3 மாத முழு அறிவிப்புக்குப் பிறகு, அதிகாரியின் விருப்பப்படி ஓய்வு பெறலாம் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பணித்திறன் மற்றும் செயல்திறனில் திருப்தியடையாத அதிகாரிக்கு 57 வயதுக்கு மேல் சேவை நீட்டிப்பு வழங்க வேண்டாம் என நியமன ஆணையம் முடிவு செய்தால்,  அதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அதிகாரிக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 6 மாத அறிவிப்புக்குப் பிறகு பணி ஓய்வு பெறும் அதிகாரம் நியமன ஆணையத்திற்கு உண்டு.