சண்டையிட்டு வேறுபாடுகளை தீர்த்துக் கொண்ட மேயரும் - முன்னாள் கவுன்சிலரும்

Prasu
2 years ago
சண்டையிட்டு வேறுபாடுகளை தீர்த்துக் கொண்ட மேயரும் - முன்னாள் கவுன்சிலரும்

அரசியல்வாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது அன்றாட நிகழ்வு. மேடைக்கு மேடை ஒருவரையொருவர் மாறி மாறி குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய வாக்குவாதத்தால் பொதுமக்களுக்கு பெரிதாக பலன் ஏதுமில்லை.நேர விரயம் தான் மிச்சம்.

பொதுவாக, அரசியல்வாதிகள் காரசார விவாதங்களில் ஈடுபட்டுக் கொள்வார்கள். ஆனால், இரு அரசியல்வாதிகளுக்கு இடையே உள்ள பிரச்சினை குத்துச்சண்டை மூலம் தீர்த்துக் கொண்டுள்ளனர். 

அவர்கள் கலப்பு தற்காப்புக்கலை மூலம் தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டை முடித்துக் கொண்டனர்.

குத்துச்சண்டை, மல்யுத்தம், ஜூடோ, ஜூஜிட்ஸு, கராத்தே தாய் பாக்சிங் போன்ற பலவித தற்காப்பு கலைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி சண்டையிடும் முறை தான் கலப்பு தற்காப்புக்கலை முறையிலான சண்டை முறை ஆகும்.

பிரேசிலில் மேற்கூறிய சண்டைக் கலையை பயன்படுத்தி இரண்டு அரசியல்வாதிகள் தங்களுக்குள் இருந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

வடக்கு பிரேசிலின் அமேசோனாஸ் மாநிலத்தில் உள்ள போர்பாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போர்பா நகரின் மேயர் சிமாவோ பெய்ஷோட்டோ மற்றும் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் எரினியூ ஆல்வாஸ் டா சில்வா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.

சில்வா தற்போதைய மேயர் மீது அடுக்கடுக்கான புகார்களை அளித்துள்ளார்.ஆன்லைன் வழியாக அவருடைய தலைமையை விமர்சித்துள்ளார். அவரை அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியும் குறிப்பிட்டுள்ளார்.

போர்பா நகரில் இருக்கும் ஒரு பூங்காவை பராமரிக்கும் மேயரின் நடவடிக்கைகளில் குற்றம் கண்டுபிடித்த முன்னாள் கவுன்சிலர், தன்னுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு வருமாறு வீடியோவில் பதிவிட்டு மேயருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

அந்த வீடியோவுக்கு பதில் வீடியோ மூலமாக மேயரும் பதில் அளித்துள்ளார். அதில் ‘தான் சண்டைக்கு தயார், எங்கே, எப்படி, எப்போது..?’  என்று கேட்டுள்ளார்.

 “நான் ஒன்றும் தெருவில் சண்டையிடும் போக்கிரி அல்ல. போர்பா நகரின் மேயர் பதவியில் இருக்கிறேன். சண்டையிட்டே தீர வேண்டும் என்பது அவரது விருப்பமானால், நாங்களும் ரெடி தான்.  நான் எப்போது தோல்வியையே பரிசாக கொடுத்தவன்” என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சண்டை உறுதியானது. அடி, உதை, குத்து உள்பட சகல வித்தைகளும்  சண்டையில் அனுமதிக்கப்பட்டது.

சண்டையை ரசிக்க பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். இருவருடைய ஆதரவாளர்களும் ரூ.1300 கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கத்திற்கு வந்திருந்தனர்.

போட்டியாளர்கள் இருவரும் ரவுண்டு கட்டி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசினர்.

இந்த வினோத சண்டைக்கு நடுவரும் இடம்பெற்றிருந்தார் என்பதுதான் முக்கியமான விஷயம்