விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சிங்கங்கள்

Prasu
2 years ago
விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சிங்கங்கள்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இரண்டு சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வெளியே வந்துள்ளது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அப்போது இரண்டு சிங்கங்களும் மயக்க மருந்துகளால் சுடப்பட்ட நிலையில் அவை மயக்கமடைந்த நிலையில் குணமடைந்துள்ளனர்

. அங்கு மாட்டாய் வனவிலங்கு குழுவின் பராமரிப்பு இரண்டு சிங்கங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் எந்த நேரத்தில் நடந்தது என குறிப்பிடப்படவில்லை. மேலும் விலங்குகள் பராமரிப்புக் குழுக்கள் வர வைக்கப்பட்டு விபரங்களை தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதில் ஏழு சிங்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவை எங்கு சென்றது என்பது தெரியவில்லை. அதேபோல் சிங்கங்கள் எங்கிருந்து வந்தது என்பதும் தெரியவில்லை. சிங்கங்கள் கண்டைனர் உடைத்து வெளியே வந்தாலும் விமான சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அதேபோல் சிங்கங்கள் கூண்டை விட்டு வெளியே வந்தாலும் கொள்கலனை சுற்றி பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தன.

இதில் 2 சிங்கங்கள் மட்டுமே கூண்டை விட்டு வெளியே வந்தாலும் அதன் கூண்டின் மேலேயே அமர்ந்திருந்தது. ஆனால் ஏழு சிங்கங்களும் தப்பி இருந்தால் விமான நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும். அதேசமயம் சிங்கம் கூட்டில் இருந்து தப்பி இருந்தாலும் முழு நேரம் கண்டைனர் சுற்றி பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தில் இருந்திருக்கும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தால் எந்தவித பாதிப்பும் விமான சேவையில் ஏற்படவில்லை என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது