தாயும் மகனும் - தந்தையும் மகளும் - விபத்தில் மரணம்

#Accident
Prathees
2 years ago
தாயும் மகனும் - தந்தையும் மகளும் - விபத்தில் மரணம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலானிகம மற்றும் மாதம்பே இரட்டைக்குளத்தில் நேற்று (15) காலை இடம்பெற்ற இரண்டு பயங்கர வீதி விபத்துக்களில் தந்தை- மகள்> தாய் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு விபத்துகளும் கட்டுப்பாடற்ற அதிவேக விபத்தினால் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கதிர்காமத்திலிருந்து யாத்ரீகர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற கார் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகமவிற்கு அருகில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் தந்தையும் அவரது நான்கு வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர் பண்டாரகம ரெருகன நாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த எச். எம். சமன் குமார 45 (தந்தை) மற்றும் அவரது இரண்டாவது மகள் நெஹாரா ஒகித்மா (4 வயது)  என பொலிஸார் தெரிவத்தனர்.

விபத்தின் போது காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் மற்றுமொரு நபரும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரில் பயணித்த சமன் குமாரவின் மனைவி, மூத்த மகள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர் ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழுவினர் கதிர்காமத்திற்கு புனித யாத்திரையாக பண்டாரகம நோக்கி சென்று கொண்டிருந்தனர்

நேற்று (15ம் திகதி) அதிகாலை 1.30 மணியளவில் அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனியா பகுதியில் கார் வீதியை விட்டு விலகி சுமார் 50 மீற்றர் முன்னோக்கிச் சென்று மீண்டும் வீதிக்கு வந்து மூன்று தடவைகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சமன் குமார காரின் சாரதியாக இருந்துள்ளார். விபத்தைத் தொடர்ந்து காரிலிருந்து சிறுமி தூக்கி வீசப்பட்டதாகவும், தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது சமன் குமார காரின் சாரதியாகவும், காயமடைந்த முன்னாள் சிப்பாய் முன் இடது ஆசனத்தில் இருந்தார்.

இறந்த சிறுமியும் மற்றைய சிறுமியும் பின் இருக்கையில் தாயின் மடியில் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

காயமடைந்த தாயும் மகளும் களுத்துறை நாகொட வைத்தியசாலையிலும், ஹொரண ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 18.2 கிலோமீற்றர் தூணுக்கும் காருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அநுராதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கட்டானை நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த தாய் மற்றும் மகன் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து புறப்பட்ட இருவரும் நேற்று காலை விபத்திற்குள்ளாகியுள்ளனர். மாதம்பே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் பயணம் செய்த  மோட்டார் சைக்கிள் மாதம்பே இரட்டைக்குளம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த  மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.  அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் கட்டானைச் சேர்ந்த 53 வயதான தாய் மற்றும் அவரது 27 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.