அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்! அமெரிக்க இராஜாங்க செயலர்

#America
Mayoorikka
2 years ago
அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்! அமெரிக்க இராஜாங்க செயலர்

அரசியல் கைதிகள் என்ற ரீதியில் கைதுசெய்து தடுத்து வைக்கப்படுபவர்கள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் இனம், மதம், மொழி, அவர்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பன உள்ளடங்கலாக அவர்களின் அடையாளத்திற்காக இலக்கு வைக்கப்படுகின்றனர்.

அத்துடன் அரசியல் கைதிகளில் சிறுபான்மையினரே பெருமளவிற்கு உள்ளடங்குகின்றார்கள். சிறைப்படுத்தப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் கைதிகள் தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், அரசியல்கைதிகள் சில சந்தர்ப்பங்களில் அவர்களின் இனம், மதம், மொழி, அவர்கள் யாரை நேசிக்கின்றார்கள் என்பன உள்ளடங்கலாக அவர்களின் அடையாளத்திற்காக இலக்கு வைக்கப்
படுகின்றார்கள். குறிப்பாக, அரசியல் கைதிகளில் சிறுபான்மையினரே பெருமளவிற்கு உள்ளடங்குகின்றார்கள். சிறைகைதிகள் சித்திரவதைகளுக்கும் மனிதாபிமானமற்ற முறையிலான நடத்தைகளுக்கும் உள்ளாக்கப்படும் அதேவேளை, அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளும் மறுக்கப்படுகின்றன.

'மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அண்மைய அறிக்கையின் பிரகாரம் சுமார் 65 இற்கும் அதிகமான நாடுகள் அரசியல் கைதிகளை சிறைப்படுத்தியிருக்கின்றன', என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் கைதிகளில் பெருமளவானோர் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் முன்னிறுத்திய அவர்களின் நாடுகளின் சுபீட்சமான எதிர்காலத்துக்கான சிறந்த நம்பிக்கை வித்துக்களாவர். அரசியல் கைதிகளை சிறைப்படுத்துவதானது ஜனநாயகம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் சீர்குலைக்கின்றது.

எனவேதான் அரசியல்கைதிகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் உலக நாடுகள் அனைத்தும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை வெளியிடவேண்டியதும் அவர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து செயலாற்றுவதும் மிகவும் அவசியமாகும்' என்றும் பிளிங்கென் வலியுறுத்தியுள்ளார்.