வழமைக்கு மாறான தாழமுக்க நகர்வு: யாழ்ப்பாணத்திற்கு எச்சரிக்கை

#weather
Mayoorikka
2 years ago
வழமைக்கு மாறான தாழமுக்க நகர்வு: யாழ்ப்பாணத்திற்கு எச்சரிக்கை

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்கக்கடலில் தற்போது ஒரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது கிழக்கு, வடகிழக்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இதனால் எதிர்வரும் 20.12.2021 வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கன மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 

பொதுவாக வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கங்கள் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்வதே வழமையாகும். ஆனால் இந்த தாழமுக்கம் வழமைக்கு மாறாக கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்வது கவனிக்கத்தக்கது.

அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பிற்பகுதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கன மழைக்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.