பிரான்ஸ் அரசாங்கத்தால் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

#France
Mayoorikka
2 years ago
பிரான்ஸ் அரசாங்கத்தால் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாடு  மிக வேகமாக பரவுவதால்  இங்கிலாந்துக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்களை "தங்கள் பயணத்தை ஒத்திவைக்க" பிரான்ஸ் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரித்தானியாவில் ஒமிக்ரான் மாறுபாட்டின் மிக வேகமான பரவலை எதிர்கொள்ளும் முகமாக, பிரான்ஸ் அரசாங்கம் பிரித்தானியாவுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவோருக்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், புறப்படும் போதும், மற்றும் வருகையின் போதும் சோதனை செய்வதற்கான நடைமுறை கட்டாயப்படுத்தப்படும்.

தடுப்பூசி போடப்படாத மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு பிரித்தானியாவுக்கு செல்லவோ, அல்லது அங்கிருந்து பிரான்ஸ் வருவதற்கோ ஒரு கட்டாயக்காரணம் இருக்க வேண்டும்.

சுற்றுலா அல்லது வணிக காரணங்களுக்கானபயணம் அனுமதிக்கப்பட மாட்டாது.

பிரான்சுக்கு வர காத்திருக்கும் பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் அவர்களது மனைவி குழந்தைகளுக்கு இந்த கட்டாய காரணங்கள் பொருந்தாது.

பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்களுடைய பயணத்திற்கு முன், டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்து பிரான்சில் தங்கியிருக்கும் முகவரியை வழங்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் சரியான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய கட்டுப்பாடுகள் ஏற்பாடு செய்யப்படும்.