யுகதனவி மனுக்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

#Court Order #Colombo
Prathees
2 years ago
யுகதனவி மனுக்கள் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

யுகதானவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை முடிவை ரத்து செய்யக் கோரிய மனு இன்று (ஜன. 16) அமைச்சரவையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை (17) காலைக்கு ஒத்திவைத்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியஇ புவனேக அலுவிஹாரேஇ பிரியந்த ஜயவர்தனஇ விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின் போது மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை சார்பில் ஆஜரான சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம்இ அனைத்து மனுக்களையும் நிராகரிப்பதற்கு பல ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

இந்த மனுக்களில் பிரதிவாதியான நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி என்ற அமெரிக்க நிறுவனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை பிரதிவாதிகளாக குறிப்பிடாதது மற்றுமொரு தவறு என சட்டமா அதிபர் தனது ஆட்சேபனைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிசக்தி விவகாரங்களில் கொள்வனவு நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்ற விதி உள்ளதால் எவ்வித சட்ட அடிப்படையும் இன்றி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேலும் ஆட்சேபம் தெரிவித்தார்.

யுகதனவி நிறுவனத்தின் பங்குகளை மாற்றும் தீர்மானம் ஒரு வியாபார கொடுக்கல் வாங்கல் எனவும் அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும் சட்டமா அதிபர் தனது ஆரம்ப ஆட்சேபனைகளில் குறிப்பிட்டுள்ளார்.