புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கதவடைப்பு  பூசை வழிபாடுகள்

Reha
2 years ago
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கதவடைப்பு  பூசை வழிபாடுகள்

இலங்கை நாட்டின் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி எனும் பழம் பிரதேசத்தில் கண்டாவளை பிரதேச செயலகத்தின் கீழ் அமைந்துள்ள புளியம்பொக்கணை கிராமத்தில் அழகுற அமைந்த கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் கதவடைப்பு  பூசை வழிபாடுகள் 2021.12.15 ம் திகதி அன்று சிறப்பாக இடம்பெற்றன.
 
கதவடைப்பு என்றால் தமிழிற்கு மார்கழி முதலாம் திகதி நாகதம்பிரானின் திருக்கதவு மூடப்பட்டு தை மாதம் முதலாம் திகதி அதாவது தைப்பொங்கல் அன்று திருக்கதவு திறக்கப்படும். இந்த ஒருமாத காலமும் தம்பிரானுக்கு பூசை வழிபாடுகள் எதுவும் நடைபெறாது.

இது ஏன் எனில் தம்பிரானின் அவதாரத்தில் பாம்பு தனது தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி புதூர் என்ற இடத்தை சென்றடைந்ததாகவும்  தந்தையாராகிய நீதிநாயக முதலியாரின் கனவில் பட்டதின் படி ஒரு மாத காலத்தின் பின் அங்கு சென்று  இறைவன் திருவருளால்  கிடைக்கப்பெற்ற சர்ப்பத் தெய்வத்தை  அழைத்து வந்து புளியம்பொக்கணையில் அரசமரத்தின் கீழ் வைத்து தெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறது.