14 உணவுப் பார்சல்களை பதின்மூன்று முறை ஒன்லைனில் ஒடர் செய்த நபர்

#Colombo #Arrest
Prathees
2 years ago
14 உணவுப் பார்சல்களை பதின்மூன்று முறை ஒன்லைனில் ஒடர் செய்த நபர்

பல்கலைக்கழகத்தில் வெளி விரிவுரையாளராக இருப்பதாகக் கூறி கொழும்பு பிரதேசத்தில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொதிகளை இணையத்தில் ஓடர் செய்து  பணம் செலுத்தத் தவறிய நபரொருவரை கெஸ்பேவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கெஸ்பேவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 50 வயதுடையவர். அவர் வெளி விரிவுரையாளர் அல்ல என்றும் சட்டப் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கடந்த சில மாதங்களாக கொழும்பு பகுதியில் உள்ள பல ஹோட்டல்களில் இருந்து  13 தடவை உணவுப் பொதிகளை ஓடர் செய்து  சந்தேகநபர்கள் கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு அழைத்துள்ளதாகவும்  அவர்களுக்கான பணம் செலுத்தத் தவறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பணம் செலுத்தாத 13 சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்இ சந்தேக நபர் ஒரே நேரத்தில் 14 உணவுப் பார்சல்கள்  ஓடர் செய்து  வீட்டுக்கு கொண்டு  வரப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் வீட்டில் அவரது வயது குறைந்த மகளும் நான்கு நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்