வெளிநாட்டு வரவுகள் சரிவு! காரணம் என்ன?

Prasu
2 years ago
வெளிநாட்டு வரவுகள் சரிவு!  காரணம் என்ன?

இலங்கைக்கான அந்நியச் செலாவணியின் முக்கிய ஆதாரமான வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து வரும் பணம் 2021 நவம்பரில் மேலும் குறைந்துள்ளது.

நவம்பர் 2021 இல் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நவம்பர் 2020 இல் பெறப்பட்ட பணப்பரிமாற்றத்தின் மதிப்பு $611.7 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 55.6% குறைவு ஆகும்.

2021 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் பெறப்பட்ட பணப்பரிமாற்றங்களின் மொத்த மதிப்பு $ 5,166.3 மில்லியனாக இருந்தது, இது 2020 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் $ 6,291.2 மில்லியனிலிருந்து 17.9% குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை அக்டோபர் 2021 இல் $ 317.4 மில்லியனாக இருந்தது, 2020 அக்டோபரில் $ 630.7 மில்லியனில் இருந்து 49.6% குறைந்துள்ளது.

இதேவேளை, புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு உத்தியோகபூர்வ வழிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் எனவும், உத்தியோகபூர்வமற்ற ஊடாக பணமோசடி செய்வது தெரிந்தோ தெரியாமலோ உதவுவதாகவும் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.