முழு நாடும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்

#Food
Prathees
2 years ago
முழு நாடும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம்

சத்தான உணவுகளான இறைச்சி, மீன், பால், முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்காததால் எதிர்காலத்தில் குழந்தைகள் உட்பட நாட்டு மக்களுக்கு கடுமையான ஊட்டச் சத்து குறைபாடு மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்காக போதுமான உணவை சமநிலைப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால் அத்தியாவசிய உணவின் விலை அதிகரித்து வருவதால், பலர் தாங்கள் உண்ணும் உணவின் எண்ணிக்கையையோ அல்லது உணவில் சேர்க்கும் அளவையோ குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொற்றுநோய்கள் பரவும் காலங்களில் போஷாக்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழக மனித போஷாக்கு நிபுணர் பேராசிரியர் ரேணுகா சில்வா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியத்திற்காக எப்படி சாப்பிட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லப்பட்டாலும் கூட,தேசிய ரீதியில் எதிர்காலத்தில் நாட்டில் உள்ள மக்களின் போசாக்கு விடயத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.