வாழைப்பழ துண்டை சாப்பிட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த இறந்த 2 வயதுச் சிறுவன்.

Keerthi
4 years ago
வாழைப்பழ துண்டை சாப்பிட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த இறந்த 2 வயதுச் சிறுவன்.

பிரித்தானியாவின் வேல்ஸில் வாழைப்பழ துண்டை சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Dylan John James Greig என்ற 2 வயது குழந்தைக்கு அவன் தாயார் Danielle Butterley (30) வாழைப்பழ துண்டை கொடுத்தார்.
பின்னர் 30 வினாடிகள் வீட்டின் பக்கத்து அறைக்கு சென்ற Danielle மீண்டும் Dylan அறைக்கு திரும்பிய போது அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அவன் சாப்பிட்ட வாழைப்பழ துண்டு தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு கொண்டிருப்பதை கண்டார். இதையடுத்து உடனடியாக 999 அவசர உதவி எண்ணுக்கு அழைத்தார் Danielle.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவமானது கடந்த ஜூலை மாதம் நடந்தது, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது.

Danielle அளித்த வாக்குமூலத்தில், Dylan நிலையை பார்த்த போது ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்தேன், அவன் மூச்சுத்திணறுவதை பார்த்தேன். அவசர உதவி குழுவினர் வருவதற்கு முன்னர் Dylanக்கு எப்படி உதவுவது என ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் மூலம் எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்போது என் மகனின் தொண்டையில் வாழைப்பழ துண்டு சிக்கியிருப்பதை கண்டேன். பின்னர் மருத்துவமனைக்கு Dylan கொண்டு செல்லப்பட்டும் அவனை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளார்.

மூச்சுத்திணறாலால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதன் விளைவாக ஏற்பட்ட தற்செயலான மரணம் இது என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4