கடலுக்கடியில் 'நடக்கும் மீன்'.. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன விசித்திரமான தகவல்..!!!!

Keerthi
2 years ago
கடலுக்கடியில் 'நடக்கும் மீன்'.. ஆராய்ச்சியாளர்கள் சொன்ன விசித்திரமான தகவல்..!!!!

ஆஸ்திரேலியாவில் மிக அரிய வகையான 'நடக்கும் மீன்' டாஸ்மானியா தீவின் கடற்கரையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அழிந்து வரும் அரிய வகை உயிரினமான 'நடக்கும் மீன்' இனத்தை ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா தீவின் கடற்கரையில் 22 வருடங்களுக்குப் பிறகு கண்டதாக காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1999-ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக இந்த பிங்க் நிற மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அரிய வகை மீன் இனம் ஒரு கால கட்டத்தில் அதிக அளவில் கடற்கரைகளில் தென்பட்டுள்ளது.

ஆனால் அந்த மீன் இனம் அழிந்து தற்போது படிப்படியாக கடற்கரை முகத்துவாரங்களில் மட்டுமே தென்படும் அளவிற்கு குறைந்து விட்டது. எனவே இந்த மீன் இனம் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு ஆபத்தான நிலையில் உள்ள அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்குப் பிறகே தற்போது இந்த அரிய வகை மீன் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா கடற்கரை பகுதிகளில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது டாஸ்மான் கடல் பூங்காவில் ஆஸ்திரேலிய கடல் ஆராய்ச்சியாளர்கள் நீருக்குள்ளே கேமராவை வைத்து இந்த அரிய வகை மீனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் 'ஆங்லர்பிஷ்' குடும்பத்தைச் சார்ந்த இந்த அரிய வகை மீன் சிறிய கை போன்ற அமைப்பினை உடல் பகுதியில் கொண்டுள்ளது. அவற்றை பயன்படுத்தி இந்த மீன்கள் எளிதாக கடல் படுகையில் மனிதர்களைப் போல நடந்து செல்கின்றன.