எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்கு அனுமதி!

#Litro Gas
Mayoorikka
2 years ago
எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்கு அனுமதி!

எரிவாயுவின் தரத்தை பரிசோதிப்பதற்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் எழுத்துமூல அனுமதியை இலங்கை தர நிர்ணய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும் அதனை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்துக்கு வாயுக்களின் தரத்தை பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், வர்த்தமானி அறிவித்தல் மூலம் எரிவாயுவின் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்துக்கு வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

எரிவாயுவின் தரம் தொடர்பான பிரச்சினை 60 வருடங்களுக்கும் மேலான பிரச்சினை என்று கூறிய இராஜாங்க அமைச்சர், எந்த நிறுவனத்தில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்கிறீர்கள்? அவர்களின் தொழிற்சாலைகள் என்ன? இறக்குமதி செய்வதற்கு முன் எப்படி சரிபார்க்க வேண்டும்? என்பது போன்ற எரிவாயு தரத்தை சரிபார்க்கும் நடைமுறை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு எரிவாயு இறக்குமதி செய்யும் நாடாக தற்போது மாலைதீவு குறிப்பிடப்படுவதாக அமைச்சர் அழகியவண்ண சுட்டிக்காட்டியுள்ளார்.