தன்னிச்சையாக கொலை செய்ய எவருக்கும் உரிமை இல்லை!

Mayoorikka
2 years ago
தன்னிச்சையாக கொலை செய்ய எவருக்கும் உரிமை இல்லை!

பணி அழுத்தத்தின் கீழ் தன்னிச்சையாக கொலை செய்ய எவருக்கும் உரிமை இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் ஓய்வு சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை T-56 துப்பாக்கியால் பொலிஸ் சார்ஜன்ட் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் லங்காதீப பத்திரிக்கை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

சந்தேகத்துக்குரிய பொலிஸ் சார்ஜன்ட் கோரியவாறு விடுமுறை கிடைக்காததால் கடும் அழுத்தத்தின் பேரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவரது தாயார் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தகருத்து தொடர்பில் விசாரணை நடத்தியதில் குறித்த சார்ஜன்ட் அவ்வாறான விடுமுறையை கோரவில்லை என தெரியவந்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

பணியில் எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும், யாரையும் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்றும், இந்த சம்பவத்தில் பொலிஸார் விலைமதிப்பற்ற நான்கு உயிர்களை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இச்சம்பவத்தில் ஓ.ஐ.சி.யும் காயமடைந்துள்ளதாகவும், அவர் குணமடைந்த பின்னர் மேலதிக விவரங்கள் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்தால் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்