"கனடாவில் காலி பணியிடங்கள்".. எவ்வளவு தெரியுமா?.. இதுவரை இல்லாத ஆச்சரியம்..!!!!

Keerthi
4 years ago
"கனடாவில் காலி பணியிடங்கள்".. எவ்வளவு தெரியுமா?.. இதுவரை இல்லாத ஆச்சரியம்..!!!!

கனட நாட்டில் 2021-ஆம் ஆண்டின் 3-வது காலாண்டில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு காலி பணி இடங்கள் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கனடா அறிக்கையின்படி 2021-ஆம் ஆண்டின் 3-வது காலாண்டில் 912,600 வரை வேலை காலி இடங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு அங்கு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் இவ்வாறு நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின் வளர்ச்சி மற்றும் வேலையின்மை வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக அதிக அளவிலான வேலை காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டின் Q3-ல் (349,700) இருந்ததை விட Q3 2021-ல் 62.1 சதவீதம் அதிகமாக, அதாவது 912,600 வேலை காலியிடங்கள் உள்ளதாக Statistics Canada குறிப்பிடுகிறது. Q3 2019 மற்றும் Q3 2021-க்கு இடையில் 20 முக்கிய தொழில்துறை துறைகளில் 18 துறைகளில் காலி இடங்கள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள், சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக உதவி, கட்டுமானம், சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தி போன்ற 5 துறைகள் ஏறக்குறைய 68 % அதிகரிப்புக்கு காரணமாகின்றன. மறுபுறம் ஒமிக்ரான் மாறுபாடும் மிகவும் பரவலாகி வருவதால், இதன் விளைவாக பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இது வேலை வாய்ப்பு திட்டத்தில் அடுத்தடுத்த புள்ளியியல் பாதிக்கலாம் என கவலையை ஏற்படுத்துகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4