தலித் சிறுமியை படுக்க வைத்து அடித்து சித்ரவதை (வீடியோ உள்ளே )

Prasu
4 years ago
தலித் சிறுமியை படுக்க வைத்து அடித்து சித்ரவதை (வீடியோ உள்ளே )

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், தலித் சிறுமி ஒருவரை ஒரு குடும்பமே சேர்ந்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் சிறுமியை இரண்டு ஆண்கள் தரையில் படுக்க வைத்து பிடித்துள்ளனர். மற்றொரு ஆண் கையில் உள்ள பிரம்பால் சிறுமியின் பாதங்களை தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்கிறார். மேலும் 3 பெண்கள் சிறுமியை கேள்விகள் கேட்கின்றனர். சிறுமி வலியால் துடித்து அழுகிறார். பிரம்பை வைத்து அடித்துக்கொண்டிருந்த ஆண் சிறுமியின் முடியை பிடித்து உலுக்கி கீழே தள்ளுகிறார்.

வீடியோவில் காணப்படும் சிறுமி திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச அரசை விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் தினமும் பெண்களுக்கு எதிராக 135 குற்றங்களும், ஜாதி ரீதியாக 34 குற்றங்களும் நடைபெறுகின்றன. அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமேதி காவல்துறை, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள குடும்பத்தினர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4