விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 13 லட்சம் பேர் வைத்தியசாலையில்!

#Accident
Prathees
2 years ago
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 13 லட்சம் பேர் வைத்தியசாலையில்!

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் ஒவ்வொரு ஐவரில் ஒருவர் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் விபத்துக்களால் வருடாந்தம் 1.3 மில்லியன் மக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

'விபத்துகள் இல்லாத பாதுகாப்பான ஆண்டு' என்ற தொனிப்பொருளில் நேற்று (29) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நாட்டில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை வீடுகளில் இருந்தே பதிவாகுவதாக வைத்திய நிபுணர்  சமித தெரிவித்தார்.

மின்சாரம் தாக்குதல், விலங்குகள் கடித்தல், பாம்பு கடித்தல்இ நீரில் மூழ்குதல் மற்றும் விஷம் அருந்துதல் போன்றவை அவற்றில் சில என அவர் சுட்டிக்காட்டினார்.

விபத்துக்கள் காரணமாக முதுகெலும்பு மற்றும் முள்ளந்தண்டு வடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.